Saturday, October 1, 2011

யாழ்த்தாய் - (ஆரம்பகால வரலாறு)

                                                                   யாழ்ப்பாணம் என்று வழங்கப்படும் இன்றைய நகரத்தின் வரலாறு கிபி.13ம் நூற்றாண்டில் ஆரம்பித்தது. யாழ்ப்பாண வைபவமாலை என்ற வரலாற்று இலக்கியம் அதற்கு ஆதாரமாகின்றது. மாதகல் என்ற கிராமத்தைச் சேர்ந்த மயில்வாகனப்புலவர் என்பவரே கிபி.17ம் நூற்றாண்டளவில் அந்நூலை ஆக்கியிருந்தார். யாழ்ப்பாணத்திற்கு நிர்வாக பொறுப்பு வகித்த ஒல்லாந்த அதிகாரி ஒருவரின் வேண்டுகோளின் படியே மயில்வாகனப்புலவர் இந்நூலை இயற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

                                                                ஐரோப்பியர் முதன்முதலில் காலடியெடுத்து வைத்தபோது இலங்கைத்தீவில் மூன்று அரசுகள் இருந்தன. அவையாவன ;-
                                    1) யாழ்ப்பாணத் தமிழரசு
                                    2) கோட்டைச் சிங்கள அரசு
                                    3) கண்டிச் சிங்கள அரசு
என்பனவாகும். இவற்றிலே யாழ்ப்பாணத் தமிழரசே காலத்தால் முற்பட்டதும் , வலுவுள்ளதுமாகும்.

                                                                           நல்லூரென்றழைக்கப்படும் நிர்வாக மையத்திலேயே யாழ்ப்பாணத் தமிழரசின் அரண்மனை, கோயில்கள், மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்து காணப்பட்டிருந்தன. மந்திரி மனை, சங்கிலியன் தோப்பு, யமுனா ஏரி மற்றும் கிறிஸ்தவ ஆலயம் அமைந்துள்ள பகுதிகளாவன நல்லூர் இராசதானியின் மையப்பகுதிகளாகும்.

                                                                        நல்லூரிலுள்ள முத்திரைச்சந்தி, யானைப்பந்தி, ஆயக்கடவை ஆகியன நிர்வாகிகள் வசித்த பகுதிகளாகும்.  நல்லூரிலுள்ள வீரமாகாளியின் முன்றலிலேயே போர்த்துக்கேயப் படை வீரர்களுக்கும் - சங்கிலியனது  படைகளுக்குமிடையே போர் நடைபெற்றதாக யாழ்ப்பாண வைபவமாலை கூறுகின்றது.

                                                                        யாழ்ப்பாணம் கிபி.1619ல் போர்த்துக்கேயரது ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. அருணகிரிநாதர் தான் பாடிய திருப்புகளில் (கிபி.17ம் நூற்றாண்டு) "யாழ்ப்பாணாயன் பட்டின மேவிய பெருமாளே" என்று நல்லூர் முருகப் பெருமானை வாழ்த்திப் பரவியதனையும் நாம் காண்கின்றோம். நல்லூரிலுள்ள முருகப்பெருமானது திருக்கோவிலை முதன்முதலில் அமைத்தது 07ஆம் புவனேகபாகுவான செண்பகப்பெருமாள் என  "நல்லூர் கட்டியம்" கூறுகிறது. "சபுமல் குமரய்ய" என்ற சிங்கள பிரதானியே செண்பகப்பெருமாள் ஆவான்.

                                                                           இவ்வாறாக சீர்மிகு யாழ்ப்பாண தமிழ் இராசதானியின் ஆரம்பகால வரலாறு அமைவதாகக் கருதலாம்.

                                                        "வாழிய யாழ்த்தாய்....!"

Sunday, September 25, 2011

''மாற்றம்...''

அன்றிருந்த நிலை ஏனோ இல்லை அவள் மனதில். அன்று அவன் அன்பின் நிழலில் இளைப்பாறிய காலங்கள் துவண்ட மனதை துண்டுகளாக்கி உடைத்தெறிந்தன. அடிபட்ட கால வெள்ளத்தின் சுழற்சி அலைகளில் துரும்பாகி சிதைந்துவிட்ட அவள் எண்ணங்களில் இன்றுவரை வண்ணம் கலையாமல் அவன் விம்பம் மட்டும் தீபமாகியது.

விழி மூடினாலும் ; விழியில் வழியும் விழி நீராயும் அவன் மட்டுமே அவளின் உறவு. அவளின் மௌனங்களின் அசைவைக் கூட கவியாக்கும் அவனது பரிசுத்த அன்பு. காலத்தின் கோரத்தாண்டவத்தில் இவையனைத்தும் கம்பமற்ற கூடாக சிரகம்பம் செய்யப்பட்டது.
.
இன்று வழி தெரியாமல் வாழ்க்கையில் தவிக்கும் அவள்; அன்று அவன் நட்பின் சாரலில் பூவாய் மலர்ந்தவள்.
அன்று அவள் சோகம் என்பதையே அறியாதவள்; இன்று புன்னகையின் வேரையே தொலைத்தவள்.

நண்பனாய் அவளுக்கு அவன் கிடைத்தது- அவள் செய்த பெரும் பலன். அவளுக்கு அவன் அவளுக்கு ஒரு நண்பனாய் மட்டுமல்ல; ஒரு தாயாக-தந்தையாக-சகோதரனாக-நண்பனாக என அனைத்து உறவாகவும் இருந்த அன்பாளன்.

எது எவ்வாறிருப்பினும் ஒரு ஆணும்-பெண்ணும் கண்ணியமாக பழகுவதைக்கூட கறை படிந்த  கண்களோடு பார்க்கும் நீச சமுதாயம் இவர்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கா...?

எனினும் காலப்போக்கில் இவர்கள் நட்பு அங்கீகாரம் பெற்றது. எனினும் நட்பின் இனிமையை சுகிக்க இன்று அவர்கள் நண்பர்களாக இல்லை.

என்னவாயிற்று இவர்களுக்கு....???

உங்கள்  எண்ணங்கள் எங்கெங்கெல்லாமோ சுழரலாம்.
ஆனால்...?
நிகழ்ந்தது என்ன???

ஆம் போராட்டம் நிறைந்த வாழ்வின் ஓர்  நாடகம் இது.

ஏதோ ஓர் கரி நாளாய் அன்றைய நாள் அவர்களின் வாழ்வை உடைத்தெறிந்தது.
ஏதோ ஓர் விபத்தில் அவளை காப்பதற்காய் தன் உயிரை வரமாக்கினான் அவன். அவள் உயிர்த்துடிப்பிற்காய் தன் உயிரை தொலைத்து அவன் கல்லறையுள் உறைந்துபோனாலும் என்றென்றும் நட்பின் நாதமாய் என்றுஃ அவன் துடிப்பு அவளினுள்ளே வாழும்.

காலத்தினால் பிரிக்கப்பட்ட நட்பாயினும் கருத்தொருமித்து ஒன்றாய் வாழ்கிறது இன்றும்...

எனினும் அவன் கல்லறையின் இறுதிக் கணங்களிலேயே சமூகத்தின் அங்கீகரிப்பு அவர்கள் தெய்வீக நட்பிற்கு.
மிகவும் கொடுமை இதை விட வேறேது..?

மாறவேண்டும் இந்நிலை...!

மாற்றவேண்டும் சமூகத்தை நாம்...!

Thursday, July 14, 2011

இன்றைய ஊடகங்கள்.

இன்றைய நாட்களில் ஊடகத்துறையே மக்களின் வாழ்க்கையில் பெரும்பங்கு வகிப்படனை கானமுடிகின்ரத். அந்தவகையில் ஒரு சமூகத்தின் உயர்ச்சியில் ஊடகத்துறையே பெருமளவு தங்கியுள்ளமை வெட்டவெளிச்சமான உண்மை எனலாம். ஊடகம் எனும்போது 'போயுரைக்கது உண்மைகளை உலகிற்கு உரைப்பது' என பொருள் கொள்ளல் நன்று.

ஒவ்வொரு ஊடகவியலாளனும் உண்மையாகவும், தெளிவாகவும் , நேர்மையாக்கவுமிருக்க வேண்டும் என்பது பரிபூரண உண்மை எனலாம்.

அந்தவகையில் ஊடகத்துறை எனும்போது அங்கே தனிப்பட்ட விருப்பு-வெறுப்பு என்பவற்றுக்கு சிறிதளவேனும் இடமளிக்கது ஒவ்வொரு ஊடகவியலாளனும் மிக நேர்த்தியாகத் தொழிர்ப்பட வேண்டும். தனிப்பட்ட ரீதியில் அவர்கள் புரியும் ஒவ்வொரு தவறுகளும் அவர்களையும் ஊடகத்துரையினையும் மட்டுமல்லாமல் சமூகத்தையும் பாதிக்குமேன்பது மனங்கொள்ளத்தக்கது.

அந்தவகையில் ஒரு தனிப்பட்ட தன சொந்தவிடயத்திலேனும் இவர்கள் தவறுவார்களாயின் அது ஊடகத்துறை மீதுள்ள மக்களின் பரிபூரண நம்பிக்கைக்கும், ஆதரவிற்கும் பங்கம் விளைவிப்பதாய் அமையும் எனலாம்.

எனவே ஊடகவியலாளன் என்பவன் தனது சுயநிலை என்பதனை சரியானதாகப்பென வேண்டும் என்பது கட்டாயமானது. இந்த சமுதாயத்தின் முன் ஊடகவியலாளர்கள் கொண்டுள்ள கடமை மிகப்பெரியதாகும். அதை நோக்குகையில் ஒரு விடயத்தின் நேர்த்தியை அறிந்து, தெளிவாக சிந்தித்து, அதன் நன்மை-தீமை, சரி-தவறு என்பவற்றை சமூகத்திற்கு வெளிப்படுத்தும் திறன் நேர்த்தியானதாக இருக்கவேண்டும்.

இவ்வாறாக சமூக வளர்ச்சியானது ஊடகவியலாளர்களிடமும், ஊடகங்களிடமுமே தங்கியுள்ளமை நிதர்சனமான உண்மையே! எனவே ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் தத்தமது போருப்பரிந்து நேர்த்தியாக செயற்ப்பட வேண்டியது மிக மிக அவசியமானதொன்று எனலாம்.



*குறிப்பு- மேலே கூறப்பட்ட விடயங்கள் தனிப்பட யாரையும் சார்ந்தவை அல்ல. பொதுப்படையான கருத்துக்கள் மட்டுமே என்பதை மனதில் கொள்க.....!!! *

Sunday, July 10, 2011

இணையத்துள் யாழ்த்தாய்...!

யாழின் கல்விநிளையானது ஒரு காலத்தில் அதியுச்ச வளர்ச்சி பெற்று சிறப்புடன் காணப்பட்டது. எனினும் இன்று அந்த நிலை வீழ்ச்சியடைந்து சிறிது சிறிதாகப் பின்தள்ளப்பட்டு மிகவும் கவலைக்குரிய நிலையில் தற்காலம் காணப்படுகிறது.

ஒருகாலத்தில் மாணவர்கள் பாடசாளைக்கல்வியையும், கல்வி நிறுவனங்களின் உதவியையும் நாடியே தமது கற்றல் வாழ்க்கையை தொடர்ந்தனர். கல்வியை வழங்க கூடிய தொழிநுட்ப சாதனங்களின் வருகையின் தடத்தையே காணமுடியாத அக்காலத்தில் கல்விநிலை அத்யுச்ச்மாகக் காநப்பட்டுஇருந்தது.

எனினும் தற்காலங்களில் தொழிநுட்ப உயர்ச்சிகள் காரணமாக கல்வித்துறை வளர்ச்சி கண்டாலும்; மாணவரது கற்கும் திறன் பாரிய வீழ்ச்சியை எதிர்நூக்கி வருவது கவலைக்குரிய விடையம் எனலாம்.

அந்தவகையில் முக்கியம் பெறுவது தற்க்கால இணையப்பாவனை. கல்விக்கான பாவனை மார்ரமடைந்துவருகின்றமை வெட்கக்கேடான விடயமாகும்.

அதிலும் இணையத்தில் இன்று பேஷ் புக் பாவனையே யாழின் மாணவர்களிடம் வேரூன்றி காணப்படுகின்றது.

மாணவர்கள் கல்விவழர்ச்சிக்கு இணையத்தை பயன்படுத்தும் நிலை மார்ரமடைன்ஹு பொழுதுபோக்கிற்க்காக மட்டுமே இணையத்தை நாடுவதனால்த்தான் கல்விநிலை பின்செல்கின்றது எனலாம்.

பேஷ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களின் ஆதிக்கமும்; அதிகரித்து வருகின்ற வலைத்தள பிராந்திய அச்சுறுத்தல் முதலியவற்றின் இனிப்பான செயர்ப்பாடுகளால் திசை திருப்பப்பட்ட மாணவர்கள் இன்று கல்வியில் பிந்தள்ளப்படுவ்துடன்; இணைய மோகத்திலிருந்து வெளிவர முடியாமல் வாழ்க்கையையே அழித்துக்கொள்வது கசப்பான உண்மையே...!

யாழின் கல்விநிலை மீண்டும் உயர வேண்டும்...!

யாழ் மாணவர்கள் வரலாற்றில் சாதனை பதிக்கவேண்டும்...!

தோழர்களே விழிப்படைவோம்...
இணைய மோகத்திலிருந்து யாழ்த்தாயை மீட்டிடுவோம்...!
ஜெயித்திடுவோம்..!!!

Saturday, July 9, 2011

விடியலின் ஜனனம்
உங்களை அன்போடு
வரவேற்கிறது...!