Sunday, September 25, 2011

''மாற்றம்...''

அன்றிருந்த நிலை ஏனோ இல்லை அவள் மனதில். அன்று அவன் அன்பின் நிழலில் இளைப்பாறிய காலங்கள் துவண்ட மனதை துண்டுகளாக்கி உடைத்தெறிந்தன. அடிபட்ட கால வெள்ளத்தின் சுழற்சி அலைகளில் துரும்பாகி சிதைந்துவிட்ட அவள் எண்ணங்களில் இன்றுவரை வண்ணம் கலையாமல் அவன் விம்பம் மட்டும் தீபமாகியது.

விழி மூடினாலும் ; விழியில் வழியும் விழி நீராயும் அவன் மட்டுமே அவளின் உறவு. அவளின் மௌனங்களின் அசைவைக் கூட கவியாக்கும் அவனது பரிசுத்த அன்பு. காலத்தின் கோரத்தாண்டவத்தில் இவையனைத்தும் கம்பமற்ற கூடாக சிரகம்பம் செய்யப்பட்டது.
.
இன்று வழி தெரியாமல் வாழ்க்கையில் தவிக்கும் அவள்; அன்று அவன் நட்பின் சாரலில் பூவாய் மலர்ந்தவள்.
அன்று அவள் சோகம் என்பதையே அறியாதவள்; இன்று புன்னகையின் வேரையே தொலைத்தவள்.

நண்பனாய் அவளுக்கு அவன் கிடைத்தது- அவள் செய்த பெரும் பலன். அவளுக்கு அவன் அவளுக்கு ஒரு நண்பனாய் மட்டுமல்ல; ஒரு தாயாக-தந்தையாக-சகோதரனாக-நண்பனாக என அனைத்து உறவாகவும் இருந்த அன்பாளன்.

எது எவ்வாறிருப்பினும் ஒரு ஆணும்-பெண்ணும் கண்ணியமாக பழகுவதைக்கூட கறை படிந்த  கண்களோடு பார்க்கும் நீச சமுதாயம் இவர்களுக்கு மட்டுமென்ன விதிவிலக்கா...?

எனினும் காலப்போக்கில் இவர்கள் நட்பு அங்கீகாரம் பெற்றது. எனினும் நட்பின் இனிமையை சுகிக்க இன்று அவர்கள் நண்பர்களாக இல்லை.

என்னவாயிற்று இவர்களுக்கு....???

உங்கள்  எண்ணங்கள் எங்கெங்கெல்லாமோ சுழரலாம்.
ஆனால்...?
நிகழ்ந்தது என்ன???

ஆம் போராட்டம் நிறைந்த வாழ்வின் ஓர்  நாடகம் இது.

ஏதோ ஓர் கரி நாளாய் அன்றைய நாள் அவர்களின் வாழ்வை உடைத்தெறிந்தது.
ஏதோ ஓர் விபத்தில் அவளை காப்பதற்காய் தன் உயிரை வரமாக்கினான் அவன். அவள் உயிர்த்துடிப்பிற்காய் தன் உயிரை தொலைத்து அவன் கல்லறையுள் உறைந்துபோனாலும் என்றென்றும் நட்பின் நாதமாய் என்றுஃ அவன் துடிப்பு அவளினுள்ளே வாழும்.

காலத்தினால் பிரிக்கப்பட்ட நட்பாயினும் கருத்தொருமித்து ஒன்றாய் வாழ்கிறது இன்றும்...

எனினும் அவன் கல்லறையின் இறுதிக் கணங்களிலேயே சமூகத்தின் அங்கீகரிப்பு அவர்கள் தெய்வீக நட்பிற்கு.
மிகவும் கொடுமை இதை விட வேறேது..?

மாறவேண்டும் இந்நிலை...!

மாற்றவேண்டும் சமூகத்தை நாம்...!